ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு..!
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது கண்டிக்கதக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்ஜிஆர் முதலமைச்சர் ஆன பிறகும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகளை வழங்கியதாகவும் ஆனால் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜெயக்குமார் தான் குத்து சண்டை விளையாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.






