--- --:--:-- --

திரைப்பட பாணியில் 25 லட்சம் ரூபாய் பணம் வழிப்பறி..!

3

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திரைப்பட பாணியில் 25 லட்சம் ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாற்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பைனான்சியர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வலையாம்பட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிய அந்த கும்பல் காரில் இருந்த 28 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றது.

 

அப்போது ஞான சேகரின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் சாவியை மேம்பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளார். அந்த கும்பல் பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்களின் காரில் இருந்த ஆதார் அட்டை உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் ஞானசேகரன் சூதாட்டத்தில் 25 லட்ச ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்ததும், அதனால் ஏற்பட்ட மோதலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon