--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் குறைவானவர்கள்..!

2

ந்தியாவின் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் குறைவானவர்கள் கான ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கொரொனா பாதிப்பு விவரங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப் பட்டவர்களில் பதினோரு விழுக்காட்டினர் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவித்துள்ளது.

 

மேலும் இரண்டு முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான சோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும், 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பரிசோதனைகளை கட்டளையா நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதோடு இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனையின் முடிவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் வழங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon