குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை உடனே நிறைவேற்ற வேண்டும்..!
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை உடனே நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்சியில் அமர்ந்து 75 நாட்கள் ஆகியும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சமூக நலத்திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு குடும்பத் தலைவிகளுக்கான தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல என சுட்டிக் காட்டிய கமல்ஹாசன் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.






