மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்..!
மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது .
இதைப்போல் நவி மும்பை தானேயில் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல சாலை, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் நகரின் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. இடைவிடாது பெய்த இந்த மழையால் வெள்ளப்பெருக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு முன் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






