ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது..!
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டார். ஆபாச படங்கள் தயாரிக்கப்படுவது குறித்தும் அவை சில செயலிகள் மூலம் வெளியிடப்படுவது குறித்து மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த குற்ற சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். ஆபாச படங்களில் நடித்த நடிகைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.






