அரிசியை சாப்பிட்ட 19 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விவசாய நிலத்தில் அரிசியை சாப்பிட்ட 19 மயில்கள் அடுத்தடுத்து உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தில் அடுத்த பலச பாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து நிகழ்விடத்தை அடைந்த வனத்துறையினர் மயில்களின் உடலை மீட்டு கால்நடை மருத்துவரின் உதவியுடன் அங்கே உறுதிசெய்தனர்.
அப்போது தோட்டத்தில் மயில்கள் உயிரிழந்தது தெரியவந்தது. தோட்ட உரிமையாளரான விவசாயி பழனிசாமியை வனத்துறையினர் கைது செய்தனர். இடையூறாக இருந்ததால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




