கல்லூரிகளில் அக்டோபர் 1ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும்..!
கல்லூரிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து அக்டோபர் 1ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை வகுப்புகள் தொடங்குவதற்கு இந்த வழிகாட்டுதல்களை ஐசிசி வெளியிட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.





