--- --:--:-- --

டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்..! மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை..!

1

ழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மக்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

 

சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து கட்சித் தலைவர்களுடன் அவர் விவாதிக்க உள்ளார்.

 

அதில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு அவைகளையும் சுமுகமாக நடத்த எதிர்க் கட்சி பிரதிநிதிகளிடம் அரசு சார்பில் ஒத்துழைப்பு கோரப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

அதேநேரம் கூட்டத்தொடரில் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு பெட்ரோல் டீசல், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon