ஜெபம் செய்வதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட்ட கிறிஸ்துவ போதகர் ..!
கன்னியாகுமரி மாவட்டம் எஸ்பி மாங்காடு பகுதியில் வீட்டில் தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட கிறிஸ்துவ போதகர் மற்றும் தாய் மகள் உட்பட நான்கு பெண்கள் மூன்று ஆண்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
குமரி மாவட்டம் எஸ்டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் கிறிஸ்தவ மத போதகரான இவர் அந்த பகுதியில் உள்ள சொகுசு வீட்டில் சர்ச் ஆஃப் இந்தியா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வருகிறார்.
இந்த சர்ச்சுக்கு இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாகவும் சர்ச் பெயரை கேடயமாக வைத்து கொண்டு அங்கு விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த வீட்டில் ஆய்வு செய்த போலீசார் 19 வயது இளம்பெண் கேரளாவை சேர்ந்த இளம்பெண் நடுத்தர வயது பெண், வயது முதிர்ந்த பெண் ஆகியோர் படுக்கையறைகளில் ஆண்களுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கிறிஸ்தவ போதகரான லால் ஆகியோரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணை அவரது தாயே விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
ஜெபம் செய்வதாக கூறிக்கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களை ஓய்வெடுப்பதற்காக சிறைக்கு அனுப்பி வைத்தனர்.







