பல்லை விழுங்கிய பெண் உயிரிழப்பு..!
சென்னையில் தண்ணீர் குடிக்கும் பொழுது செயற்கை பல்லை விழுங்கிய பெண் உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் அடுத்த ராமபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி ராஜலட்சுமி. 43 வயதான இவர் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் 3 செயற்கை பற்களை கட்டி வந்துள்ளார்.
இதற்கிடையே சம்பவத்தன்று ராஜலட்சுமி தன் வீட்டில் தண்ணீர் குடிக்கும் பொழுது ஒரு பல்லை விழுங்கியுள்ளார். இதில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செயற்கை பல்லை விழுங்கியதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.






