--- --:--:-- --

உயிரிழந்தவருக்கு உயிர் இருப்பதாக கூறி மருத்துவம் பார்த்த மருத்துவமனை..!

11

மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் அருகே உயிரிழந்த உடலுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். சாங்கிலி மாவட்டம் இஸ்லாம் புறம் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் அங்கு உள்ள ஆதார் ஹெல்த்கேர் என்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

அந்த பெண்ணிற்கு மருத்துவர் யோகேஷ்வர் மருத்துவம் அளித்து வந்தார். இதில் மருத்துவ பலனின்றி கடந்த மார்ச் மாதம் 8ஆம் நாள் அந்த பெண் உயிரிழந்துள்ளார். ஆனால் இதனை மருத்துவர் யோகேஷ் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

மேலும் இரண்டு நாட்கள் மருத்துவம் தருவதாக கூறி அதற்கான கட்டணத்தை பெற்றுள்ளார். இரண்டு நாட்களில் அந்த பெண் உயிரிழந்ததாகக் கூறி உடலை அவரது மகனிடம் ஒப்படைத்து உள்ளார். உடலைப் பெற்று குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்தி உள்ளனர்.

 

இந் நிலையில் பெண்ணின் மகன்இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போதுதான் அந்தப் பெண் 8 ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது. இதனைக்கண்ட பெண்ணின் மகன் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon