விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!
கொரொனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடந்து முடிந்து.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே மாதம் சென்னையில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் மற்றுமொரு ஊரடங்கு காரணமாக தடைபட்டது.
தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் சென்னையில் பிரமாண்ட செட்டில் விஜய் பூஜா ஹெக்டே பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சென்னை வந்த பூஜாவின் படங்கள் வெளியாகியுள்ளன.







