அஜீத் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகிறது..!
நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் இந்த மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாகவும் இன்னும் சில சண்டை காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வலிமை அப்டேட் கேட்டு தினம்தோறும் டுவிட்டரில் வலியுறுத்தி வரும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் களையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை இரண்டும் இந்த மாதத்தில் வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.







