முதல் சுற்றிலேயே காயம் காரணமாக வெளியேறிய செரினா வில்லியம்ஸ்..!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே காயம் காரணமாக செரினா வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார். கிராம்ஸ்லெம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
வீராங்கனைகள் எதிர்த்து செரினா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தபோது களத்தில் கால் சறுக்கியதால் இடது காலில் காயம் ஏற்பட்டது. சிறிய முதலுதவி மருத்துவத்திற்கு பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார்.
34 நிமிடங்களுக்கு பிறகு மூன்றுக்கு மூன்று என்ற கணக்கில் இருந்த நிலையில் வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் முதல் சுற்றிலேயே நடந்த விம்பிள்டன் தொடரில் இருந்து செரினா வில்லியம்ஸ் வெளியேறினார்.






