கண் முன்னே தாயை அரிவாளால் வெட்டிக் கொன்ற பெரியப்பா மகன்..!
நாகை மாவட்டம் திருமுறுகல் அருகே கண் முன்னே தாயை அரிவாளால் வெட்டிக் கொன்ற பெரியப்பா மகனை கல்லால் அடித்து சகோதரர்கள் கொலை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரகாளி என்பவருக்கும், அவரது அண்ணன் மகனான ராஜு என்பவருக்கும் நில பிரச்சினையில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜ பாண்டி வளர்த்து வந்த இடத்தினை வீர காளியின் மூத்த மகன் வாங்கியதில் இருந்து இந்த பிரச்சினை நீடித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் வீரகாளியை ராஜு வலது தோள்பட்டையில் வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த வீரகாளியின் மனைவி தனபாக்கியத்தை கழுத்தில் வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அங்கு வந்த வீரர்களின் மூன்றாவது மகன் முத்து பாண்டி தனது தாய் தந்தையை தாக்கிய ஆத்திரத்தில் அவரது தலையில் சிமெண்ட் கல்லை போட்டதில் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் வீரகாளி, ராஜூவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ராஜூ செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில் வீரர்கள் வீரகாளியை சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறார். கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






