பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த பெண் டாக்டர்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் தப்பியோடிய நிலையில் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையம் எதிரே நந்தினி பிரியா என்ற ரத்த பரிசோதனை நிலையத்தில் அனைத்து வகை நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவம் பார்க்க வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவ குழு மற்றும் வருவாய் அதிகாரிகள் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ரேணுகா என்பவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததை கண்டறிந்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து அரசு மருத்துவ அலுவலர் சங்கம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




