போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி..!
சேலத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மலையாளப்பட்டி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஏத்தாப்பூர் போலீசாருக்கும், முருகேசன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றி போலீசார் தாக்கியதில் முருகேசன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.







