--- --:--:-- --

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி 60 கோடி ரூபாய் மோசடி..!

4

துரையில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி 60 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

தாளவாசல் பகுதியில் ஆனந்தி, சையத், மனோஜ் குமார் ஆகிய மூவரும் தனியார் நிறுவனம் நடத்தி அதில் முதலீடு செய்தால் மூன்று மாதங்களில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர்.

 

இதனை நம்பி திருச்சி, தருமபுரி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாக தெரிகிறது. முதல் இரண்டு மாதங்கள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கிய நிலையில் மே மாதம் 7ஆம் தேதி முதல் மூன்று தலைமறைவாகினர்.

 

இதனால் அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதோடு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த 60 கோடி ரூபாயை மீட்டு தரவேண்டும் என மாநகர காவல்ஆணையர் சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் அளித்தனர்.

Leave a Reply

Right Menu Icon