கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மாமியாரை கொலை செய்த நபர்..!
விருதுநகரில் கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையை விலக்கி விட சென்ற மாமியாரை மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் முனிஸ்வரி.
இவர் கட்டணசேவல் கிராமத்தை சேர்ந்த ராம் குமார் என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராம்குமார் குடும்பத்தில் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இருவரும் விவாகரத்து கோரி முனீஸ்வரி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆத்திரமடைந்த ராம்குமார் மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றிய நிலையில் சண்டையை விலக்கி விட முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள் சென்றுள்ளார்.
ஆத்திரத்தின் உச்சியிலிருந்த ராம்குமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மாரியம்மாளை குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்தனர்.







