அதிக குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை..!
மிசோரமில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த மாநில விளையாட்டு துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அவரது தொகுதியான ரைஸ் வால் பகுதியில் அதிக குழந்தைகளுடன் வசித்து வரும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை மட்டுமின்றி சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






