--- --:--:-- --

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ள இயக்குனர் சுசீந்திரன்..!

4

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இயக்குனர் சுசீந்திரன் நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இரண்டாவது அலையில் நிவாரண பணிக்காக பொதுமக்களும் அனைத்து துறையினரும் தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

அந்த வகையில் நடிகர் சூர்யா, அஜித், லிங்குசாமி, ஷங்கர், விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பலர் நிதி உதவி அளித்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon