நிவாரண பணத்திலும் கணவன் மது வாங்கி குடித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!
கொரொனா நிவாரணமாக அரசு கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கணவன் மது வாங்கி குடித்து தீர்த்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை தாம்பரம் அருகே சமரபுரி என்பவர் நாள்தோறும் குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரசு அளித்த 2000 ரூபாய் நிவாரண பணத்தை சமரபுரி வாங்கி மது குடித்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனதால் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.







