காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை..!
ஆந்திர மாநிலம் கடப்பாவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞரொருவர் கொலை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிரிஷாவை இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காதலை ஏற்க அவர் தொடர்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் கடைசியாக பேச வேண்டும் என கூறி சிறுமியை தனியாக அழைத்து உள்ளார். சிரிசா வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தியுள்ளார்.
இந்த நிலையில் சிரிஷாவின் அலறலைக் கேட்டு அங்கு சென்று கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.







