ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் உயிருக்கு போராடிய நபர்..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் உயிருக்கு போராடிய நபரை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். ஆனந்த மங்கலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற சிறுவன் ஒருவன் ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலேயே இருந்துள்ளார்.
நண்பர்களுடன் விளையாடி பொழுதை கழிப்பதால் சகோதரி திட்டியதை அடுத்து சிறுவன் சசிகுமார் வீட்டிலிருந்து எறும்பு மருந்தை குடித்துள்ளார். உடனே சிறுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர் முதலுதவி மட்டும் அளித்துள்ளார்.
அருகிலுள்ள செம்பனார் கோவில் தரங்கம்பாடி மருத்துவர்கள் இல்லாத நிலையில் மயிலாடுதுறைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை அழைத்தனர். சீர்காழியில் இருந்து வர ஒரு மணி நேரம் ஆனதை அடுத்து சிறுவனை இருசக்கர வாகனத்தில் வைத்து காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.






