6 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த 15 வயது சிறுவன்..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த 15 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவனை 15 வயது சிறுவன் கிணற்றில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் உயிரிழந்த நிலையில் அந்த சிறுவனின் உடலை மீட்டனர்.
இதனிடையே கிணற்றுக்குள் தள்ளிவிட்ட சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.






