மகளிடம் தவறாக நடந்து கொண்டவனை அடித்து கொலை செய்த தந்தை..!
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் கிராமத்தில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞரை ஓட ஓட விரட்டி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை நிகழ்விடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
பரனூர் கிராமத்தை சேர்ந்த டில்லி என்பவரின் மகளிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது வழியிலேயே பரிதாபமாக ராஜேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் நிகழ்விடத்திலேயே தன் தந்தையை கைது செய்தனர்.







