தமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”!
தமிழகத்தில் தற்போது 1,25,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 78 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 23,207 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 23 ஆயிரத்து 015 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 068 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 068 ஆக அதிகரித்துள்ளது.