கொரோனாவை செயலிழக்க செய்யும் புது வகை மாஸ்க்..!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவனம் ஒன்று வைரஸை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட முக கவசத்தை தயாரித்துள்ளது.முப்பரிமாண மற்றும் மருந்துகளை ஒருங்கிணைத்து இந்த முக கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புனே நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த முக கவசத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்டுள்ளது. இந்த முக கவசம் வைரசை அழிக்கும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உறுதியளித்திருக்கிறது.







