கன்றுக்குட்டிக்கு முதலுதவி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கன்றுக்குட்டி அடிபட்டு இருப்பதை கண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முதலுதவி சிகிச்சை அளித்து கால்நடை மருத்துவமனைக்கு கன்றுக்குட்டியை அனுப்பி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு முடித்த பின்பு திருத்தணிக்கு சென்றபோது வழியில் கன்றுக்குட்டி ஒன்று அடிபட்டு சாலையில் கிடப்பதை கண்டு காரை நிறுத்தினார்.
கன்றுக்குட்டிக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்த பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.






