--- --:--:-- --

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் – அமைச்சர் சேகர்பாபு

7

னைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்த 100 நாட்களில் கோவில்களில் பணி அமர்த்தப்படுவர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

முதன்மையான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என பதாகை வைத்த திட்டமிட்டுள்ளதாகவும் தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon