பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்..!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு வரவேற்பளித்த கூட்டத்தில் நடந்து சென்றபோது திடீரென ஒருவர் அதிபரின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் விமான நிலையத்தில் இருந்து இறங்கி வரவேற்றதற்காக கூடியிருந்த மக்களிடம் கைகுலுக்கினார். அப்போது கையை குலுக்குவது போல வந்த நபர் ஒருவர் திடீரென அதிபரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிபரின் பாதுகாவலர்கள் உடனடியாக சுற்றிவளைத்து அதிபரை தாக்கிய நபரை கைது செய்தனர். அவருடன் இருந்த மற்றொருவர் அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவதால் போலீசார் கைது செய்தனர். இதற்கான காரணம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






