தமிழகத்தில் ரேஷன் கடைகள் இன்று முதல் மாலை 5 மணி வரை இயங்கும்..!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் இன்று முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரொனா பாதிப்பு நிலவி வரும் சூழலில் கொரொனா நிவாரணம் மற்றும் மாதாந்திர பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய ஏதுவாக யானை கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு செயல்பாடு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் இன்று முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நியாயவிலைக் கடைகள் செயல்படும் எனவும் மறு உத்தரவு வரும் வரையில் இந்த நேரம் அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணையும் மற்றும் 14 மளிகை பொருட்களின் தொகுப்பு வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் பிற்பகலில் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன்கள் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
முற்பகல் வழக்கம்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






