--- --:--:-- --

முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாணை..!

1

முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரொனா பரவியபோது ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

மருத்துவர்கள் ,செவிலியர்கள், காவல்துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

 

மேலும் ஊக்கத்தொகை வழங்கும் பணிக்கு பொது சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Leave a Reply

Right Menu Icon