சீன உருவாக்கிய செயற்கை சூரியன்..! 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்டது..!
சீனர்களின் எச்எல்2எம் டோகோமாக் எனும் செயற்கை சூரியன் என்ற புதுவித சாதனை ஒன்றை படைத்துள்ளது. சீனர்கள் என்றாலே வித்தியாசம், புதுமைகளுக்கும் பெயர் போனவர்கள்.அந்த புதுமையில் ஒன்றுதான் செயற்கை சூரியன்.
உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் சூரியன் அளவில் மிகப்பெரியது. அதைக்காட்டிலும் பூமி மிகச்சிறியது. இந்த செயற்கையான சூரியனை உருவாக்கும் பணிகளில் சீனா பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. நாம் இப்போது அணுக்கரு பிளவு எனும் முறையை தான் பயன்படுத்தி வருகிறோம்.
இந்த முறையில் யுரேனிய அல்லது புளுடோனிய அணுக்களை தாக்கி சிறு சிறு அணுக்களாக பிரிப்பார்கள். அப்படி பிடிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் வெளிப்படும். ஆற்றலைப் பயன்படுத்தி தான் அணு உலைகளில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
இந்த செயல்முறையின் போது அதிக அளவிலான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்படும். இதற்கு நேரெதிர் சேரும் முறைதான் அணுக்கரு இணைவு. இந்த செயல்முறையில் இரு அணுக்கள் ஒரே அளவாக இணைக்கப்படும்.
இந்த முறையில் இரு நன்மைகள் உண்டு. ஒன்று இதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் ஆனது பிரிக்கும் போது வெளிப்படும் ஆற்றலை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். மற்றொன்று இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக்கதிர்வீச்சு எதுவும் வெளிப்படாது.
இணைவு மூலம் அணுக்கழிவு குறைவாக இருக்கும். இதனால் சமீப காலமாகவே உலக விஞ்ஞானிகள் பலரும் தூய்மையான ஆற்றலைப் பெறும் நோக்கில் பாதுகாப்பான அணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரியனை உருவாக்கும் பணியில் இந்த 2 ஆண்டுகளில் 100க்கும் அதிகமான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சீனா உருவாக்கிய செயற்கை சூரியன் 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்டுள்ளது.






