--- --:--:-- --

பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் கைது..!

7

திருப்பூரில் கத்தி, பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த முகமது, அப்பாஸ் ஆகிய இருவரும் கையில் கத்தியுடன் பாட்டு பாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon