--- --:--:-- --

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்..!

8

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவில் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை மறுநாள் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon