உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு புதிய பெயர்கள் அறிவிப்பு..!
உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்தை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. அதன்படி முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா வகைக்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனாவுக்கு ஆல்பா என்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதற்கு பீட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனாவுக்கு காமா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு வகை உருமாறிய கொரொனாவும் அதிக அளவில் பரவுவதால் அதிக அபாயகரமானவை ஆகக் கருதப்படுகின்றன. இதேபோல அமெரிக்காவில் கண்டறியப்பட்ட வகைக்கு எப்சிலான் என்பது உள்ளிட்ட மேலும் 5 வகைகளுக்கும் பெயர் இடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு உருமாறிய கொரொனாவுக்கு கப்பா என்று பெயரிடப்பட்டுள்ளது. உருமாற்றம் காணும் கொரொனாவுக்கு அது முதலில் கண்டறியப்பட்ட நாட்டின் பெயரை சூட்டுவதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த நிலையில் கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு அழைக்கும் முறையை உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.







