நடிகை அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு..!
நடிகை அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கருக்கலைப்பு செய்ய துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் கடந்த 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், ஏமாற்றுதல் பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவிற்கு காரணமாக இருத்தல் போன்ற 26 பிரிவுகளில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் மணிகண்டனின் நண்பர் பரணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





