கொரொனா தொற்றால் அடுத்தடுத்து உயிரிழந்த தாய் மற்றும் மகன்..!
குடியாத்தம் அருகே கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கொரொனா தொற்று காரணமாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது மகனுக்கு தொற்று உறுதியானதால் அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் உயிரிழந்த சில மணி நேரத்திற்கு பின் அவரது மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






