--- --:--:-- --

தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு இருசக்கர வாகனம், வாஷிங்மெஷின், தங்க நாணயம் பரிசு..!

3

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு குலுக்கல் முறையில் இருசக்கர வாகனம், வாஷிங்மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை எஸ்டிஎஸ் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

 

நாள்தோறும் 100 நபர்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர்களுக்கு பிரியாணி, செல்போன் ரீசார்ஜ், பெண்களுக்கு புடவை என உடனடி பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஊசி போட்டுக் கொண்டவர்கள் தகவல்களை ஒரு பெட்டியில் போட்டு தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடைய ஒரு புதுமையான இந்த முயற்சியால் கொரொனா இல்லாத ஒரு முன்மாதிரியான பகுதியாக இது மாறும் என கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon