நிவாரண நிதி இரண்டாவது தவணை வழங்கும் திட்டம் ஜூன் 3 ஆம் தேதி தொடக்கம்..!
பெருந்தொற்று நிவாரண நிதி இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முழு ஊரடங்கும், கடந்த திங்கள்கிழமை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல்தவணையாக 2000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது தவணை ஜூன் மூன்றாம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.






