சக வீரரை அடித்து கொலை செய்த சுஷில்குமார் கைது..!
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமாரை கைது செய்தது டெல்லி காவல்துறை. சக மல்யுத்த வீரரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சுஷில்குமார் தேடப்பட்டு வந்த நிலையில் டெல்லி காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
அவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானமும் அறிவித்திருந்தது. தலைமறைவாக இருந்த சுஷில்குமாரை டெல்லி காவல்துறையின் தனிப்படையினர் கைது செய்திருக்கின்றனர்.







