தமிழகத்தில் வீடு தேடி வருமா ரேஷன் பொருட்கள்..?
தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரேஷன் பொருட்கள் எவ்வித தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஹனிபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரொனா காலத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் எளிய முறையில் கிடைக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டெல்லியில் கொரொனா காலத்தில் மற்றும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது எனவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.







