திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம்; 771 போருக்கு கொரோனா தொற்று உறுதி.. 7பேர் பலி !!
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது இதில் 29ஆயிரத்து 210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 5179 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 343 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் மாவட்டத்தில் 64, 56, 61,71,53, 67 வயதுடைய 6 ஆண்கள் 64 வயது பெண் ஒருவர் ஆகிய 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர் இதனைஅடுத்து இறப்பு எண்ணிக்கை 272 ஆக உள்ளது.





