--- --:--:-- --

கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் முதலில் பரவியது..!

1

கொரோனா வைரஸ் சீனா ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் முதலில் பரவியது என்று கூறப்படுவதை நிராகரிக்க முடியாது என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியான டேவிட் தெரிவித்துள்ளார்.

 

அவருடைய தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒன்று கொரொனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த கோட்பாடு தவறானது என்று தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரை இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

உலக சுகாதார அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரொனா தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில் ஆய்வு கூடங்களில் இருந்து கொரொனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்றும் இது தொடர்பான விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon