--- --:--:-- --

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரொனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு..!

7

டுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரொனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

 

ஆனால் இது 0.01 முதல் 0.04 என்ற மிகச்சிறிய விகிதத்திலேயே இருக்கும் எனவும், அப்படி தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படும் எனவும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

உடலுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்தாலும் அது பல்கிப்பெருகி பாதிப்பை ஏற்படுத்துவதை தடுப்பூசி தடுக்கும் என அது கூறுகிறது. அதேநேரம் சோதனை முடிவுகள் பாசிட்டிவாக வந்தால் மற்றவர்களுக்கு தொற்று பரவும். எனவே தடுப்பு ஊசி போட்ட பிறகு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon