மே மாதம் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பு..!
பெருந்தொற்று காரணமாக மே மாதம் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு நிதி உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆன்லைன் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் தேர்வு நடத்துவது குறித்து ஜூன் மாதம் முதல் வாரம் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விளக்கம், தேவையான உதவி உடனடியாக கிடைப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைப் போன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தப் படுவதற்கு முன்பு மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






