--- --:--:-- --

சென்னையில் 7 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் குவிப்பு..!

5

வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய 76 மையங்களிலும் 50 ஆயிரம் போலீசார் முதற்கட்டமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்று முழு ஊரடங்கு உள்ளது. எனவே 50,000 போலீசார் வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

 

சென்னையை பொருத்தவரையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் குறிப்பாக 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

 

துணை ராணுவத்தினரும் வாக்குப்பெட்டி வைத்திருக்கக்கூடிய இடங்களிலும் அடுத்ததாக ஆயுதப்படைகள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

 

தேர்தல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கக் கூடிய சூழ்நிலையில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ளூர் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக 200 ரோந்து வாகனங்கள் சென்னை முழுவதுமாக வாகன சோதனை ரோந்து பணியிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon