ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது..!
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது. இந்தியாவில் வேகமாக கொரொனா பரவும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான மாநிலங்கள் 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி முகாமை தள்ளிவைத்து உள்ள சூழலில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல்தொகுப்பு ரஷ்யாவிலிருந்து இன்று இந்தியா வருகிறது.
அடுத்த சில தினங்களில் 2 லட்சம் தடுப்பூசிகளும் அடுத்த மாதம் 50 லட்சம் தடுப்பூசிகளும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







